மிடில்டௌன் முருகன் கோவில் திருவிழா
2011 செப்டம்பர் 9-11 நாட்களில் கனெக்டிகட்டின் மிடில்டௌனில் உள்ள முருகன் கோவிலில் கும்பாபிஷேகமும் புதிய பஞ்சலோக கல்யாண முருகன் சிலை பிரதிஷ்டையும் விமரிசையாக நடைபெற்றன. கனெக்டிகட் வேலி இந்துக் கோவில் சங்கம் இதை நடத்தியது. கோவிலைச் சுற்றிக் காவடி உற்சவம், திருப்புகழ்ப் பாடல்கள், கச்சேரிகள், சிறுவர் நடத்திய பூஜைகள், ஹோமங்கள் என்று இதில் பல புனித நிகழ்வுகள் இடம்பெற்றன. டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன் மேற்பார்வையில் கோப்லா புவனேஷ் ஒத்துழைத்து விழாவைச் சிறப்புற நடத்தினர்.

சேஷன்,
மிடில்டௌன்

© TamilOnline.com