செப்டம்பர் 11, 2011 (ஆவணி நான்காவது ஞாயிற்றுகிழமை) அன்று டெட்ராயிட் பாலாஜி கோவில் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் திருக்கல்யாண வைபவத்தை செயின்ட் ஜார்ஜ் கல்சுரல் சென்டர், ட்ராய், மிசிகன் அரங்கத்தில் கொண்டாடினார்கள். கனடாவைச் சேர்ந்த நகீந்திரன் பஞ்சமி, ஸ்ரீராம் குழுவினரின் நாதஸ்வரத்துடன் வைபவம் தொடங்கியது. விஷ்ணு சஹஸ்ர நாமம், லக்ஷ்மி அஷ்டகம் ஓதப்பட்டன. பிறகு குரு சுகன்யா சுவாமிநாதனின் மாணவ மாணவிகள் பெருமாளுக்கு சுலோகம் வாசித்தனர். பூஜ்யஸ்ரீ சேதாநந்தஜி உரையாற்றினர். வரதராஜ பட்டர், சடகோபன், ஸ்ரீஹரி, ரமேஷ் ஆகியோர் விமரிசையாகத் திருமணச் சடங்குகளை நடத்தினார்கள். பின்னர் பெருமாள் தாயார் புறப்பாடு நடந்தது. ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர். தேவிகா ராஜன் பக்திப் பாடல்கள் பாடினார். மாலையில் சத்யநாராயண பூஜை நடைபெற்றது.
ஸ்ரீதர் வெங்கடாச்சாரி |