அட்லாண்டாவில் 'Enchanted Snowwhite' நாட்டிய நாடகம்
அக்டோபர் 29, 2011 அன்று Third Eye Dancers, பரதகலா நாட்ய அகாடமியுடன் இணைந்து 'Enchanted Snowwhite' நாட்டிய நாடகத்தை க்வின்னெட் மையத்தில் (Gwinnet Center) நடத்தவுள்ளனர். அகாடமியின் நிறுவனர் சுபத்ரா சுதர்ஷன் இதை வடிவமைத்துள்ளார். இந்நிகழ்ச்சி அமெரிக்காவில் குடியிருக்கும் பூட்டானிய அகதிகளின் நலனுக்காகவும் அவர்கள் குழந்தைகளின் கல்வி நிதிக்காகவும் நடத்தப்படுகிறது.

15 ஆண்டுக்கால கடும் போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்ட பூட்டானிய அகதிகளின் குழந்தைகளுக்குக் கல்விக்கண் திறப்பதன் மூலம் அவர்களது எதிர்காலத்துக்கு நம்மாலான உதவிகளைப் புரிய வேண்டுமென்று சுபத்ரா சுதர்ஷன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதில் SEWA மற்றும் வாழும் கலை அமைப்புகள் கை கோத்துள்ளன.

செய்திக் குறிப்பிலிருந்து

© TamilOnline.com