தென் கலிபோர்னியா தமிழ் மன்றம் ஆண்டு விழா
அக்டோபர் 15, 2011 அன்று ஆரஞ்ச் கவுன்டியில் உள்ள தென் கலிபோர்னியா தமிழ் மன்றம் தனது ஆறாம் ஆண்டு விழாவை லேக்வுட் நகரத்தில் உள்ள ஹூவர் நடுநிலைப் பள்ளி அரங்கத்தில் மாலை 5 மணிக்குக் கொண்டாட உள்ளது. விழாவின்மூலம் திரட்டப்படும் நிதி சங்கரா கண் அறக்கட்டளைக்குக் வழங்கப்படும். பிரபல இசைக்குழுவான 'இளையராகம்' நீங்கள் கேட்டவை என்ற மெல்லிசை நிகழ்ச்சியில் 1980களில் பிரபலமான இளையராஜாவின் திரைப்படப் பாடல்கள் இடம்பெறும்.

நுழைவுச் சீட்டுகள் சுலேகா இணையதளத்தில் கிடைக்கும்.
மேலும் விபரங்களுக்கு: www.facebook.com
மின்னஞ்சல்: SoCalTM@gmail.com

அருள்,
தென்கலிஃபோர்னியா

© TamilOnline.com