சங்க காலத் தமிழர்களின் வாழ்வைச் சொல்கிறது பாலை. 'கற்றது தமிழ்' இயக்குநர் ராமின் மாணவரான செந்தமிழன் இயக்குகிறார். சுனில் நாயனாக நடிக்க ஷம்மு நாயகியாக நடிக்கிறார். "ஐவகை நிலங்களாகப் பிரிந்து வாழ்ந்த மக்கள் கூட்டத்தின் வாழ்வை, அதற்குள் இருந்த காதல், காமம், நட்பு, துரோகம், போராட்டம் ஆகியவற்றை பார்வைக்கு எடுத்து வந்திருக்கிறேன். வழக்கமான சினிமாவின் பாடு பொருள்கள் இல்லாமல் இதை முடித்திருக்கிறேன். கலித்தொகை நூலின் முல்லைக் கலி, பாலைக் கலி என இரண்டு தொகுதிகளையும் கதைக்கருவாக எடுத்துக் கொண்டேன். அதிலிருந்த ஒரு துளி, ஒரு சம்பவம்தான் முதல் விதை" என்கிறார் இயக்குநர். ரஹ்மானிடம் இசை பயின்ற வேத் ஷங்கர் இசையமைக்கிறார். தஞ்சாவூரை ஒட்டிய பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது.
அரவிந்த் |