1934ம் ஆண்டில் காந்திஜி குற்றாலத்துக்கு வந்திருந்தார். காந்தி அங்கே குளிக்க வந்திருந்தவர்களிடம், "இந்த அருவியில் ஹரிஜனங்கள் குளிக்க அனுமதிக்கப்படுகிறார்களா?" என்று கேட்டார். உடன் அவர்கள், " இல்லை. இங்கே வந்து குளிக்க அனுமதியில்லை" என்றனர்.
அவ்வளவுதான். "என்றைக்கு இந்த அருவியில் குளிக்க ஹரிஜனங்கள் அனுமதிக்கப்படுகிறார்களோ, அன்றைக்கு நானும் வந்து குளிக்கிறேன்" என்று சொல்லிவிட்டு, திரும்பிக்கூடப் பார்க்காமல் நடந்து சென்றார் காந்திஜி.
|