அக்டோபர் 2011: தென்றல் குறுக்கெழுத்துப் புதிர்
குறுக்காக
5. அலை பொய்பேசு (2)
6. ஓர்ப்படியாள்? இல்லை இன்னமும் நெருங்கிய உறவினள் (6)
7. சுநயனாவின் சம்பந்தி (4)
8. புன்னகை புரியா நாடு? (3)
9. இறுதி சிகரத்தின் உச்சி மேல் அங்காடி (3)
11. இழிந்த வறுமையில் சிக்கியவர் செய்த பிழை? (3)
13. பழங்காலத்தில் காசுக்கு ஒரு அவதாரம் (4)
16. அணையா அடுப்புடைய சமையலறை கட்டுவித்தவர் இயற்றிய நூல் (6)
17. இந்த கட்டுப்பாடு சாலை விபத்தைத் தடுக்கும்; ஆனால் சமையல் எப்படி நடக்கும்? (2)

நெடுக்காக
1. ஏளனத்துடன் கூடிய சகா மேலேறிச் செல்ல குதிரை (4)
2. பணக் கஷ்டமில்லாமல் கடை துறைந்த யாகவர் சதி கலைந்தது (5)
3. அசல் இல்லை ஆனால் அது வட்டியுமில்லை (3)
4. அலற நரி தலை வெட்ட வெட்டு (4)
10. வனப்பாசி வழுக்கினால் நிச்சயம் பச்சையானதல்ல (5)
12. செழிப்பு சூழலில் நடப்பட்ட பாதியான வடமரம் உயர்ந்தோங்கும் (4)
14. நீரால் சுத்தம் செய், முடிக்காமல் மற்றொன்று தூக்குமரத்திற்குத்தான் (4)
15. தெய்வத்துக்கும் முன்னதாகச் சொல்லப்படுவர் விமான முனையில் சிட்டாய்ப் பறப்பவர்? (3)

வாஞ்சிநாதன்


செப்டம்பர் புதிர் மன்னர்/அரசிகள்

© TamilOnline.com