தேவையான பொருட்கள் ஆரஞ்சு பழத் தோல் (பொடியாக நறுக்கியது) - 2 கிண்ணம் மிளகாய் வற்றல் - 4 உளுத்தம்பருப்பு - 2 மேசைக்கரண்டி நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி உப்பு - சிறிதளவு மஞ்சள்பொடி - தேவைக்கேற்ப
வறுத்துப் பொடிக்க வெந்தயம் - 1 தேக்கரண்டி பெருங்காயம் - சிறிதளவு கடுகு - சிறிதளவு
செய்முறை கடைசியாகச் சொன்ன மூன்றையும் வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். 1 தேக்கரண்டி எண்ணெயில் ஆரஞ்சுத் தோல், உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து லேசாக வதக்கவும். உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றலைச் சிறிது எண்ணெய் விட்டு வதக்கவும். வதக்கிய ஆரஞ்சுத் தோல், வறுத்த மிளகாய், உளுத்தம்பருப்பு சேர்த்து அரைக்கவும். மீதி எண்ணெயில் கடுகு தாளித்து அரைத்த விழுது போட்டுச் சுருள வதக்கி, கடைசியில் வறுத்துப் பொடித்த வெந்தயம், பெருங்காயப் பொடி சேர்த்துக் கிளறி இறக்கவும். இது தயிர் சாதத்திற்குத் தொட்டுக் கொண்டால், சாதம் உள்ளே போவதே தெரியாது.
ஜயலக்ஷ்மி கணேசன், ட்ராய், மிச்சிகன் |