தொக்கு! நல்லா மொக்கு!
பச்சை ஆப்பிள் தொக்கு

தேவையான பொருட்கள்
கிரீன் ஆப்பிள் துருவல் (தோல் சீவியது) - 2 கிண்ணம்
பச்சை மிளகாய்த் துண்டு - 1 மேசைக்கரண்டி
சில்லி ஸாஸ் - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
மஞ்சள்பொடி - தேவைக்கேற்ப

செய்முறை
வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு பச்சை மிளகாய்த் துண்டுகளைப் போட்டு வதக்கவும். ஆப்பிள் துருவல், உப்பு, மஞ்சள்பொடி போட்டு நன்கு வதக்கிக் கரண்டியால் மசிக்கவும். சுருள வதக்கிய பிறகு சில்லி ஸாஸ் விட்டுக் கிளறி இறக்கவும். பிரெட் சாண்ட்விச் கூடச் சாப்பிட்டால் சூப்பர்!

ஜயலக்ஷ்மி கணேசன்,
ட்ராய், மிச்சிகன்

© TamilOnline.com