சான் ஹோசே பாலாஜி கோவில் பூமிபூஜை
ஆகஸ்ட்13, 2011 அன்று அல்விஸோவில் உள்ள புதிய கோவிலுக்கான இடத்தில் பூமி பூஜை நடைபெற்றது. அன்று சிலைகளுக்கு அபிஷேகம், பூஜைகள், பஜனை, ஹனுமான் ரதயாத்திரை ஆகியனவும் நடத்தப்பட்டன. சுவாமி அனந்தநாதாவின் உரையைத் தொடர்ந்து, நைலேஷ், ரமணா, ரோஹித், மனோஜ், பொம்ப்ரா, லக்ஷ்மி ஆகியோர் பேசினர். பின்னர் வாசவி அறக்கட்டளையின் ராவ் பனுகந்தி, வி.ஆர். ரங்கநாத் ஆகியோர் ஆலய நிர்மாணத்துக்குத் தமது அமைப்பின் ஆதரவு குறித்துப் பேசினர். கோவில் அறங்காவலர் குழுவின் செயலர் ராஜேஷ் காமத் நன்றியுரை வழங்கினார். மேலும் விவரங்களுக்கு: www.BalajiTemple.net; தொலைபேசி: (408) 203-1036.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com