பருப்பு உசிலி அவல்
தேவையான பொருட்கள்:
அவல் - 1 கிண்ணம்
கடலைப்பருப்பு - 1 கரண்டி
துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 4
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
மஞ்சள்பொடி - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - சிறிதளவு (தாளிக்க)
கருவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:
அவலை ஊற வைக்கவும்.
பருப்புகளை ஊறவிடு உப்பு, பெருங்காயம் மற்றும் மிளகாய் சேர்த்து மிக்சியில் கொர கொரப்பாக அரைத்து ஆவியில் வைத்து வேக விடவும்.
பின்பு அதனை எடுத்து உதிர்த்து வாணலியில் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் தாளித்து, அரைத்து உதிர்த்து வைத்த பருப்பை அதனுடன் சேர்த்து நன்றாக கிளறவும்.
இவை பொல பொலவென வந்ததும் மஞ்சள் பொடி, அவல் இவற்றை போட்டு கிளறவும்.
அவல் எல்லாம் நன்றாக வெந்தவுடன இறக்கி கருவேப்பிலையை நறுக்கிப் போடவும்.
உப்பு தேவை என்றால் போட்டுக் கொள்ளலாம்.

தங்கம் ராமசாமி

© TamilOnline.com