அமெரிக்கக் கனவில் யுவன், யுவதி


அமெரிக்கக் கனவில் இருக்கும் இளைஞனுக்கு திடீர் என்று காதல் முளைக்கிறது. அந்தக் காதலினால் ஏற்படும் பிரச்னைகள், அவன் எப்படிச் சமாளிக்கிறான், அவனுடைய கனவு நிறைவேறியதா என்பதைச் சொல்லவரும் படம் 'யுவன் யுவதி'. நாயகனாக பரத் நடிக்க, அவருக்கு ஜோடியாக ரீமா கல்லிங்கல் நடிக்கிறார். சந்தானம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். விஜய் ஆண்டனி இசையமைக்க, ஜி.என்.ஆர். குமரவேல் எழுதி, இயக்குகிறார்.

அரவிந்த்

© TamilOnline.com