ஒத்த வீட்டுப் பிசாசு


பேய், பிசாசு, பூதமுன்னா எல்லோருக்குமே கொஞ்சம் பயம்தான். இந்த நம்பிக்கைகள் எப்படி ஒரு பெண்ணின் வாழ்க்கையைச் சீரழிக்கிறது, அதற்குத் தீர்வு என்ன என்பதை மையமாக வைத்து உருவாகி வரும் படம் 'ஒத்த வீடு'. புதிய இயக்குநர் பாலு மலர்வண்ணன் படத்தை இயக்குகிறார். நாயகனாக திலீப்குமார் அறிமுகமாக, அவருக்கு ஜோடியாக ஜானவி நடிக்கிறார். வடிவுக்கரசி, எம்.எஸ். பாஸ்கர், வையாபுரி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஒரு பாடலை கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் அண்ணன் மகன் சண்முகசுந்தரம் எழுதியிருக்கிறார். இசை: வி. தஷி.

அரவிந்த்

© TamilOnline.com