மீண்டும் இதுதாண்டா போலீஸ்


டாக்டர் ராஜசேகர் நடிப்பில் பல ஆண்டுகளுக்கு முன்னால் வெளிவந்து காவல்துறையினரின் பெருமையை உயர்த்திய படம் இதுதாண்டா போலீஸ். இப்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிக் கொண்டிருக்கிறது. நாயகனாக மீண்டும் ராஜசேகரே நடிக்கிறார். நாயகியாக நடிப்பது மதுரீமா. படத்தை ஜீவிதா ராஜசேகர் இயக்குகிறார். மோகன் வசனம் எழுத, எஸ். சின்னா இசையமைக்கிறார். அரசியல்வாதிகளையும், அதிகாரத்தில் உள்ளவர்களையும் அவர்கள் செய்யும் அநீதிகளையும் எதிர்த்து ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி எப்படிப் போராடுகிறார், அதற்கு அவர் கொடுக்கும் விலை என்ன என்பதுதான் படத்தின் கதை.

அரவிந்த்

© TamilOnline.com