2ஜி ஸ்பெக்ட்ரம்


உலகத் தமிழர்களுக்குத் தலைக்குனிவை ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் ஊழலை மையமாக வைத்து உருவாகி வரும் படம் 2ஜி ஸ்பெக்ட்ரம். ஜான் மனோஹர் எழுதி இயக்கும் இப்படத்தில் ரியாஸ்கான், சாந்தினி செந்தில், சிங்கமுத்து உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 2ஜி ஸ்பெக்டரம் ஊழலின் தொடக்கம் முதல் அந்த பிரச்சனை எப்படி வெளி உலகுக்குத் தெரிய வந்தது என்பது வரை பல விஷயங்களை ஆராய்ந்து காட்சிப்படுத்த இருக்கிறார்கள். மொரீஷியஸ் தீவு, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும், மும்பை, தில்லி உள்ளிட்ட பல இடங்களிலும் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.

அரவிந்த்

© TamilOnline.com