முழுவதும் புற்று மண்ணாலேயே கட்டப்பட்ட இந்த நாகதேவதையின் ஆலயம் திருவள்ளூர்-திருத்தணி பாதையில் உள்ளது. எந்த மழையிலும் கரையாத அதிசயமான இந்தக் கோயிலினுள்ளே உள்ள எல்லா தெய்வங்களும் புற்றுகளின் மேலேதான் அமர்ந்துள்ளன. இந்த கம்பீரமான கிராமக் கோயிலுக்கு ஆடி மற்றும் தை மாதங்களில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். சில டிவி சீரியல்களிலும் தலை காட்டியுள்ள இந்த ஆலயம் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு ஸ்தலம்.
தகவல், படம்: சந்திரசேகர், லண்டன், இங்கிலாந்து |