தேவையான பொருட்கள் அடைத்துண்டங்கள் - 1 கிண்ணம் பால் - 3 கிண்ணம் இனிப்பான கண்டென்ஸ்டு பால் - 1 சர்க்கரை - தேவைக்கேற்ப ஏலக்காய்த்தூள் - சிறிதளவு நெய் - 2 தேக்கரண்டி சிறியதாகக் கீறிய தேங்காய்த் துண்டங்கள் - சிறிதளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் விட்டு அதைக் கொதிக்கவிடவும். கொதித்ததும் இந்த அடையைப் போட்டு அடுப்பிலிருந்து இறக்கி மூடவும். 15 நிமிடங்கள் கழித்து தண்ணீரை வடிகட்டி விடவும்.
அடி கனமான பாத்திரத்தில் பாலை விட்டு கொதிவந்ததும் இந்த அடைகளைப் போட்டு ஒருமணி நேரம் குறைந்த சூட்டில் சமைக்கவும்.
அடிக்கடி மென்மையாகக் கிளறி இவை ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொள்ளாமலும் அடிப்பிடிக்காமலும் பார்த்துக் கொள்ளவும். பின்னர் சர்க்கரை சேர்த்த குறுக்கிய பாலை விட்டுக் கலக்கவும்.
தேவையான அளவு சர்க்கரையைச் சேர்த்து மேலும் ஒரு 15 நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்னர் இறக்கி வைக்கவும். நெய்யில் தேங்காய்த் துண்டங்களைப் பொன்னிறமாக வறுத்து, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து விடவும். நேந்திரம் பழம் கொண்டு பழப்பிரதமனும் செய்யலாம். இதில் பாலுக்கு பதில் தேங்காய்ப்பால் சேர்த்துச் செய்ய வேண்டும்.
சரஸ்வதி தியாகராஜன் |