மூலிகைக் காபி
தேவையான பொருட்கள்
சுக்கு - சிறுதுண்டு
ஓமம் - 1 தேக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
ஏலக்காய் - 3
கொத்துமல்லி விதை - 1 தேக்கரண்டி
துளசி - 6
செம்பருத்திப் பூ (காய வைத்துப் பொடித்தது) - 1 தேக்கரண்டி
வல்லாரை இலை - சிறிதளவு
பனங்கற்கண்டு (அ) பனை வெல்லம் - தேவைக்கேற்ப
பால் - 1/2 லிட்டர்

செய்முறை
சுக்கு, ஓமம், மிளகு, ஏலக்காய், தனியா எல்லாவற்றையும் வாணலியில் பொன்னிறமாக வறுத்துப் பொடி செய்து கொண்டு துளசி, வல்லாரை இலைகளைக் கழுவி வைத்துக் கொள்ளவும். பாலை நன்றாகக் காய்ச்சி அதில் பொடிகளைப் போட்டு செம்பருத்திப் பூப் பொடி போடவும். சூடாக இருக்கும் பாலில் துளசி, வல்லாரையும் போட்டு ஒரு கொதி வந்தவுடன் இறக்கிப் பனங்கற்கண்டும் போட்டு வடிகட்டிக் குடிக்கலாம். உடம்பிற்குச் சிறந்த பானம் இது. பால் சேர்க்காமல் 'மூலிகை டீ' போலவும் இதைக் குடிக்கலாம்.

தங்கம் ராமசாமி,
நியூ ஜெர்ஸி

© TamilOnline.com