தேவையான பொருட்கள் பாசிப்பயறு - 100 கிராம் கொண்டைக் கடலை - 1/2 கிண்ணம் சோளம் - 1/2 கிண்ணம் கொள்ளு - 1/4 கிண்ணம் சோயா பீன்ஸ் - 1/2 கிண்ணம் சீரகம் - 1 தேக்கரண்டி பச்சை மிளகாய் - 6 வெங்காயம் (நறுக்கியது) - 1/2 கிண்ணம் இஞ்சி - ஒரு சிறுதுண்டு கறிவேப்பிலை - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை பயறு, கொண்டைக் கடலை, சோளம், கொள்ளு, சோயா பீன்ஸ் எல்லாவற்றையும் வெறும் வாணலியில் வாசனை போகப் பொன்னிறமாக வறுத்து மிக்சியில் சற்றுக் கொரகொரப்பாக அரைத்து, தண்ணீர் விட்டு ஊற வைக்கவும். ஒரு மணி நேரம் ஊறியதும் உப்பு, இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், சீரகம், கறிவேப்பிலை போட்டு சிறுசிறு போண்டாவாக எண்ணெயில் உருட்டிப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்து எடுத்துச் சாப்பிடவும். தேங்காய்ச் சட்னியுடன் சாப்பிட மிகச் சுவையாக இருக்கும். நல்ல ஊட்டச் சத்து மிக்க போண்டாவாகும் இது.
தங்கம் ராமசாமி, நியூ ஜெர்ஸி |