ஜூன் 25, 2011 அன்று, அமெரிக்கத் தமிழ் கத்தோலிக்கச் சங்கம், தனது வருடாந்திர, தூய மரியன்னையின் திருவிழாவை, நியூ ஜெர்சி ப்ளூ ஆர்மி (NJ Blue Army) திருத்தலத்தில் கோலாகலமாகக் கொண்டாடியது. தமிழர் முறைப்படி அன்னைக்குச் சேலை அணிவித்து, தேரில் நிறுத்தி, பூக்களால் அலங்கரித்து, பக்திப் பரவசத்துடன் பக்தர்கள் திருத்தேர் பவனி கொணர்ந்தனர். திருஜெபமாலையும், சிறப்புத் திருப்பலியும் நடந்தேறின. 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அமெரிக்கத் தமிழ் கத்தோலிக்கச் சங்கம் ஒரு லாபநோக்கற்ற அமைப்பாகும். இது நியூ ஜெர்சி, நியூ யார்க், பிலடெல்ஃபியா பகுதிகளுக்குச் சேவையாற்றுகிறது.
மின்னஞ்சல்: attamilcatholicsusa@yahoo.com
தாமஸ் அமுதரசு, தலைவர், USA தமிழ் கத்தோலிக்கச் சங்கம், நியூ யார்க் |