தேவையான பொருட்கள்
புடலங்காய் (துண்டங்கள்) - 1 கிண்ணம் வெள்ளைப் பூசணிக்காய் (துண்டங்கள்) - 1 கிண்ணம் பச்சைமிளகாய் (நீளவாக்கில் கீறியது) - 5 கறிவேப்பிலை - தேவைக்கேற்ப உப்பு - தேவைக்கேற்ப தேங்காய்ப் பால் - 1 1/4 கிண்ணம் தேங்காய் எண்ணெய் - 1/2 மேசைக்கரண்டி
செய்முறை
புடலங்காய், வெள்ளைப் பூசணிக்காய் ஆகியவற்றைத் தண்ணீரில் உப்பு, பச்சைமிளகாயுடன் நன்கு வேகவைத்துக் கொள்ளவும். பின்னர் தேங்காய்ப் பால், தேங்காய் எண்ணெய், கறிவேப்பிலை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
சிலர் இதில் ஊறவைத்து வேகவைத்த வெள்ளைக் காராமணியையும் சேர்த்துச் செய்வர். பறங்கிக்காய் சேர்த்தும் செய்யலாம்.
சரஸ்வதி தியாகராஜன் |