உப்புமா என்றாலே முகம் சுளிப்பவர்கள் உண்டு. ஆனால், உப்புமாவைச் செய்து காட்டி சர்வதேசச் சமையல் போட்டியில் 1 லட்சம் டாலரைத் தட்டிச் சென்றிருக்கிறார் ஃபிளாய்ட் கார்டோஸ் (Floyd Cardoz). லாஸ் ஏஞ்சலஸில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் எளிதாக சமைக்கப்படும் உணவுக்கான போட்டி நடந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக இதில் லாஸ் ஏஞ்சலஸைச் சேர்ந்த மேரி சூ மில்லிகன் வெற்றி பெற்று வந்தார். இந்த ஆண்டு நடந்த போட்டியில் அமெரிக்க வாழ் இந்தியரும், நியூ யார்க்கின் 'தப்லா’ ரெஸ்டாரண்டில் செஃப் ஆகப் பணிபுரிபவருமான ஃபிளாய்ட் கார்டோஸ் வெற்றி பெற்றிருக்கிறார். அவர் செய்து காட்டியது வெறும் உப்புமாதான். காளானுடன் பலவகையான காய்கறிகளையும், ரவையையும் கலந்து அவர் செய்த அந்த உப்புமா நடுவர்களது மனதைக் கவரவே அவருக்குப் பரிசு கிடைத்தது. இதில் முக்கியச் செய்தி, பரிசுத் தொகையைப் புற்றுநோய் ஆராய்ச்சி நிதிக்கு அவர் நன்கொடையாக வழங்கியதுதான்.
|