காளன்
தேவையான பொருட்கள்

வாழைக்காய் - 2
தேங்காய்த் துருவல் - 1 கிண்ணம்
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
புளித்த தயிர் - 3 கிண்ணம்
தேங்காய் எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் வற்றல் - தேவையான அளவு
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் - 2/3 கிண்ணம்
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை

வாழைக்காயின் தோலைச் சீவி சிறிய துண்டங்களாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். தயிரை தண்ணீர் விடாமல் கடைந்து வைத்துக் கொள்ளவும். அடி கனமான ஒரு பாத்திரத்தில் 2 கிண்ணம் அளவு தண்ணீர் விட்டுக் கொதிக்கவைக்கவும்.

தண்ணீர் கொதித்த பின்னர் வாழைக்காய்த் துண்டுகளைப் போட்டு, அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து நன்கு வேகவிடவும். தேங்காய்த் துருவல், சீரகம், பச்சைமிளகாய் ஆகியவற்றை மிக்ஸியில் நன்றாக
கெட்டியாக அரைத்து எடுக்கவும். இதை வெந்த வாழைக்காயில் போட்டுக் கொதிக்கவிடவும்.

பின்னர் கடைந்த தயிரை விட்டு ஒரு கொதி விட்டு இறக்கி, இதில் கடுகு, வெந்தயம், மிளகாய் வற்றல், கறிவேப்பிலை ஆகியவற்றை தேங்காய் எண்ணெயில் தாளித்து கலக்கவும். உண்பதற்கு இது மிகவும் சுவையாக இருக்கும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com