தைரியம் என்பது....?


வருண் நாயகனாக அறிமுகமாகும் படம் 'மல்லுக்கட்டு'. நாயகியாக ஹனிரோஸ் நடிக்கிறார். சபேஷ் கார்த்திக், பரத்ரெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இயக்குநர் விக்ரமனின் மாணவர் முருகானந்தம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார். "தனி மனிதனின் காதலுக்கான போராட்டம்தான் கதை. அதில் கொஞ்சம் கமர்ஷியல் கலந்திருக்கிறேன். தைரியம் என்பது, பயம் இல்லாத மாதிரி நடிப்பதுதான் என்று சொல்லுவார்கள் அதுவும் கதையின் கரு" என்கிறார். நாயகன் வருண், தனுஷின் சித்தப்பா மகன். இசை: தாஜ்நூர். பாடல்கள்: வாலி, ஆண்டாள் பிரியத்ரஷினி, சினேகன், கபிலன்.

அரவிந்த்

© TamilOnline.com