யானையைப் பிடிக்கும் சிவாஜி பேரன்
பிரபு சாலமன் இயக்கும் 'கும்கி' என்ற புதிய படத்தில் சிவாஜியின் பேரனும் நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு கதாநாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக நடிக்கிறார் மலையாள ஹீரோயின் லட்சுமி மேனன். யானைகளை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில், யானை டிரெயினராக விக்ரம் பிரபு நடிக்கிறார். தம்பி ராமையாவுக்கு இதில் முக்கிய பாத்திரம். பிரபு சாலமன், "மனிதர்கள் வாழும் பகுதிகளில் யானைகள் புகுந்து அட்டகாசம்னு தினமும் நியூஸ் வருது. இதுக்கெல்லாம் காரணம் என்னங்கறதை ஆராய்ந்து அதற்கு முடிவு சொல்லும் வகையில் திரைக்கதை அமைத்திருக்கிறேன். இதற்காக 3,000 கிலோ மீட்டர் வரை பயணம் செய்திருக்கிறேன். மலை கிராமங்களின் அழகான சூழலில் படம் பிடிக்கிறோம்" என்கிறார்.அரவிந்த்

© TamilOnline.com