மாங்காய் லஸ்ஸி
தேவையான பொருட்கள்
கெட்டி மோர் - 2 கிண்ணம்
தேன் - 1 தேக்கரண்டி
பழுப்புச் சர்க்கரை (பிரவுன் ஷுகர்) - 1 மேசைக்கரண்டி
மாங்காய் விழுது - 1 தேக்கரண்டி
சின்னமன் தூள் - 1 சிட்டிகை
ஐஸ் கட்டிகள் - தேவைக்கேற்ப

செய்முறை
மிக்ஸியில் மோர் ஊற்றி அதில் பழுப்புச் சர்க்கரை, தேன், மாங்காய் விழுது, சின்னமன் தூள், ஐஸ் கட்டிகள் சேர்த்து நன்றாக அடித்து (beat) கொள்ளவும். ஜில்ஜில் மாங்காய் லஸ்ஸி, குடித்தால் ஒரே குஷி!

பிரேமா நாராயணன்,
கேன்டன், மிச்சிகன்

© TamilOnline.com