மாங்காய் தோசை
தேவையான பொருட்கள்
மாங்காய் துருவல் - 1/2 கிண்ணம்
சோளமாவு அல்லது மைதாமாவு - 1 கிண்ணம்
அரிசிமாவு - 1 கிண்ணம்
பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) - 2
கடுகு - 1 தேக்கரண்டி
ஜீரகம் - 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
பச்சைக் கொத்துமல்லித் தழை - சிறிதளவு
சமையல் எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, அரிசி மாவு, உப்பு எல்லாவற்றையும் போட்டு அதில் தண்ணீர் சேர்த்து தோசை மாவுப் பதத்தில் கரைத்துக் கொள்ளவும். நான்ஸ்டிக் தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் ஊற்றி, கடுகு, ஜீரகம், பெருங்காயப்பொடி, பச்சை மிளகாய் சேர்த்து மிதமான தீயில் தாளிக்கவும். இதில் மாங்காய்த் துருவல் சேர்த்து வதக்கி, கரைத்த மாவில் போட்டுக் கலந்து கொள்ளவும். மாவு கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். பச்சை கொத்துமல்லியைப் பொடியாக அரிந்து சேர்த்துக் கலந்துகொள்ளவும்.

நான்ஸ்டிக் தோசைகல்லில் மிதமான தீயில் மாவைத் தோசையாக எண்ணெய் ஊற்றி வார்க்கவும். பஞ்சு போன்ற தோசை தயார்.

பிரேமா நாராயணன்,
கேன்டன், மிச்சிகன்

© TamilOnline.com