அயோவாவில் ஸ்ரீருத்ரம்
2011 மே 13 முதல் 15 வரை நடைபெற்ற கிழக்கு அயோவா (செடர் ராப்பிட்ஸ்) இந்துக் கோவில் கும்பாபிஷேகத்தின் போது ஸ்ரீருத்ர பாராயணம் நடைபெற்றது. 8 குருக்களும் 59 ரித்விக்குகளும் 15ம் தேதியன்று ஏகாதச ருத்ரம் ஹோமம் நடத்தினர். விழாவில் குழந்தைகள் இசை, குறுநாடகம் ஆகியவற்றை வழங்கி மகிழ்வித்தனர்.

எம். சேகர்,
செடர் ராப்பிட்ஸ், அயோவா

© TamilOnline.com