இண்டஸ் கிரியேஷன்ஸ் வழங்கும் 'சக்கரவியூகம்'
ஜூலை 10, 2011 அன்று சியாட்டில் நகரத்தில் உள்ள கிர்க்லேண்ட் பெர்ஃபார்மன்ஸ் மையத்தில் 'இண்டஸ் கிரியேஷன்ஸ்' குழுவினர் தமது ஆறாவது நாடகமான 'சக்கரவியூகம்' என்பதை அரங்கேற்ற உள்ளனர்.

இந்த நாடகத்தின் கதை, இயக்கத்தை மனோஜ் சிவகுமாரும், தயாரிப்பு நிர்வாகத்தை வெங்கட் கிருஷ்ணமாச்சாரியும் பார்த்துக் கொள்கின்றனர்.

அமெரிக்காவில் பல்வேறு கணினி நிறுவனங்களில் பணிபுரியும் தமிழ்க் கணிப் பொறியாளர்கள் இணைந்து, வாஷிங்டன் மாகாணத்தின் சியாட்டில் நகரத்தில் 2006ம் ஆண்டு இண்டஸ் க்ரியேஷன்ஸ் நாடகக் குழுவை ஏற்படுத்தினர். முற்றிலும் தன்னார்வலர்களே பங்குபெறும் இக்குழுவில் நடிப்பு, மேடை நிர்வாகம், இசை, கதை, வசனம், அரங்க வடிவமைப்பு, ஒலி, ஒளி என்று எல்லாவற்றையும் தாமே திட்டமிட்டு உருவாக்கிச் சிறப்பாக அளிக்கிறார்கள். "நாடகக் கலையை வளர்ப்பது மட்டுமல்லாமல், நாடகங்கள் மூலமாக ஈட்டும் தொகையை இந்தியாவில் இருக்கும் தொண்டு நிறுவனங்களுக்கு அளிப்பதுதான் எங்கள் முக்கிய நோக்கம்" என்று இவர்கள் பெருமையோடு சொல்கிறார்கள். இதுவரை ஐந்து நாடகங்களை மேடையேற்றி வெற்றி கண்டிருக்கிறார்கள். அண்டை மாநிலமான ஒரேகானில் உள்ள போர்ட்லாண்ட் நகரத்திலும் அவர்களது அழைப்பின் பேரில் சென்று நாடகங்களை அரங்கேற்றியுள்ளனர்.

இதுவரை இண்டஸ் கிரியேஷன்ஸ் 50,000 டாலர் தொகையை இந்தியத் தொண்டு நிறுவனங்களான AID India, சங்கரா கண் மருத்துவமனை, உதவும் கரங்கள் போன்ற நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளனர். 'சக்கரவியூகம்' மூலம் பெறப்படும் தொகை AID India-வுக்கு வழங்கப்பட உள்ளது.

மேலும் விவரங்களுக்கு: www.IndusCreations.org

தேதி: 10 ஜூலை 2011
காட்சி நேரம்: மதியம் 2:00 மணி; மாலை 6 மணி
இடம்: Kirkland Performance Center
நுழைவுச் சீட்டுகள்: $15, $20
நுழைவுச் சீட்டு வாங்க: www.Facebook.com/IndusCreations

தமிழ்த்தேனீ

© TamilOnline.com