காந்தம்


முற்றிலும் புதுமுகங்களின் பங்களிப்பில் உருவாகி வரும் படம் 'காந்தம்'. கதாநாயகனாக தேஜ் அறிமுகமாகிறார். நாயகியாக ரச்சனா நடிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் புதுமுகம் சரவணன். "இது காதல் கதை. சிலருக்கு லட்சியத்தை அடைய காதல் உதவும். சிலரது காதல் வாழ்க்கையையே தொலைத்து விடும். காதல் தேவை. ஆனால் அது லட்சியத்துக்கான காதலாக இருக்க வேண்டும் என்பதைச் சொல்ல வரும் படம் இது" என்கிறார் இயக்குநர் சரவணன். முக்கிய வேடத்தில் பாண்டியராஜன் நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

அரவிந்த்

© TamilOnline.com