காட்டுப்புலி


அர்ஜுன் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் நடிக்கும் படம் 'காட்டுபுலி'. ஒரு அடர்ந்த காட்டுக்குள் மூன்று ஜோடிகள் சுற்றுலா செல்கின்றனர். அவர்கள் அங்கு ஒரு இக்கட்டான சூழலில் மாட்டிக்கொள்கிறார்கள். அந்த இக்கட்டு என்ன, கதாநாயகன் அதிலிருந்து அவர்களை எப்படி காப்பாற்றுகிறான் என்பதுதான் படத்தின் கதை. நாயகனாக அர்ஜுன் நடிக்க, அவருக்கு ‌ஜோடி பியங்கா தேசாய். பிரபல ஹிந்திப்பட சண்டைப் பயிற்சி இயக்குநரான டினு வர்மா இப்படத்தை இயக்குகிறார். இசை: விஜய் வர்மா. படம் பார்ப்பவர்கள் தாங்களும் காட்டுக்குள் மாட்டிக் கொண்ட உணர்வு இந்தப் படத்தில் ஏற்படுமாம். தப்பிக்க வழி வைத்தால் சரிதான்.

அரவிந்த்

© TamilOnline.com