நோயாளி: டாக்டர்... நீங்க கொடுத்த பில்லுல எவ்வளவு பணமுன்னு போடல. டாக்டர்: நல்லது. சுயநினைவு திரும்பிடுச்சு. இந்தாங்க பில்.
*****
தொண்டர் 1: நாம தேர்தல்ல ஜெயிக்க மாட்டோம் போல இருக்கு! தொண்டர் 2: ஏன் அப்படி சொல்ற? தொண்டர் 1: தலைவர் தன் வீட்டுக்கு மிக்சி, கிரைண்டர் வாங்கக் கடைக்கு போயிருக்காறே!
*****
தொண்டன் 1: தலைவரு மழைக்குக்கூட ஸ்கூல் பக்கம் போனது இல்லை. கல்வி மந்திரி ஆக்கிட்டாங்களே! தொண்டன் 2: அப்படியாவது ஸ்கூல் பக்கம் போவட்டுமேன்னுதான்...
*****
ஒருவர்: ஊர்ல ஒரு பிரச்சனைன்னா அவர்தான் முன்னாடி நிப்பாரு. மற்றொருவர்: அதனாலதான் நாட்ல இன்னும் மழை பெய்யுது. ஒருவர்: நீங்க வேற... எல்லாருக்கும் முன்னாடி பஸ்ஸைப் பிடிச்சு வேற ஊருக்குப் போய்டுவாருன்னு சொல்ல வந்தேன்!
*****
கமலா: அரசியல்வாதிய காதலிச்சது தப்பா போச்சு. விமலா: ஏன், என்ன ஆச்சு? கமலா: அந்தக் காதலே எதிர்க்கட்சிகளின் சதின்னு சொல்லிட்டாரு!
*****
மாணவன்: சார், நீங்க சொன்ன எந்தக் கணக்கும் பரிட்சையில வரல! ஆசிரியர்: எப்படி வரும். நான்தான் சயின்ஸ் டீச்சர் ஆச்சே.
மிச்சிகன் ஹபீப் |