கண்டீரோ இந்நாடு, காட்டுங்கள் எங்கே!
நாடொன்று கேட்டேன் என்கேள்வி இதுதான்.
கண்டீரோ இந்நாடு காட்டுங்கள் எங்கே.
அங்கே
போரில்லை எதுவும் மாறு பாடில்லை
ஒற்றுமை உண்டு, வேற்றுமை யில்லை.
பசுமை உண்டு, வறுமை யில்லை.

நாடொன்று கேட்டேன் என்கேள்வி இதுதான்.
கண்டீரோ இந்நாடு காட்டுங்கள் எங்கே.
அங்கே,
அன்புப் பேச்சுண்டு ஆயுத மில்லை
குற்ற மில்லை நீதிச் சட்டமில்லை
துன்ப மில்லை நன்றே யுண்டே.

நாடொன்று கேட்டேன் என்கேள்வி இதுதான்.
கண்டீரோ இந்நாடு காட்டுங்கள் எங்கே.
அங்கே,
அணைப்பது தவிர அடிப்பதே இல்லை
புதுமை மருத்துவம் பொங்கி யெழுமங்கே.
சாவில்லை மக்கட்கோ மற்றெவ் வுயிர்க்கோ.

நாடொன்று கேட்டேன் என்கேள்வி இதுதான்.
கண்டீரோ இந்நாடு காட்டுங்கள் எங்கே.
அங்கே
கொடையே தவிர இல்லையென் பதில்லை
உரிமை என்பது அனைவரின் உரிமை.
அடுத்தவர்க் கின்பம் அளிப்பதே தாரகம்

நாடொன்று கேட்டேன் என்கேள்வி இதுதான்.
கண்டீரோ இந்நாடு காட்டுங்கள் எங்கே.
சொல்லுங்கள் எனக்கே, சொல்லுங்கள் எனக்கே

ஆங்கில மூலம்: விஷ்ணு சுந்தரமூர்த்தி (11வயது)
தமிழ் வடிவம்: கௌசல்யா ஹார்ட்

© TamilOnline.com