நிதலாக்ஷயா ராஜாவுக்கு வயது இரண்டு. அவர் 'Collaborative for Children' அமைப்பு நடத்திய ஓவியப் போட்டியில் முதல் பரிசை வென்றிருக்கிறார். இதற்குப் பொதுமக்களே நடுவர்களாக இருந்திருக்கிறார்கள். எப்படித் தெரியுமா? நிதலாக்ஷயாவின் படங்கள் மேற்கூறிய அமைப்பின் வலைத்தளத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டன. அங்கே வந்த பார்வையாளர்களில் மிக அதிகமானவர்கள் அவர் வரைந்த படத்தையே தாம் விரும்புவதாகக் கூறவே, அவர் முதல் பரிசான 150 டாலரைப் பெற்றார். பன்னிரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான போட்டியில் இரண்டே வயதான நிதலாக்ஷயா பெற்றிருப்பது சாதனைதான்.
போட்டியை நடத்திய குழந்தைகளுக்கான கூட்டணி அமைப்பு லாப நோக்கற்றது. ஹூஸ்டனை மையமாக கொண்டு இயங்குகிறது. இளம் சிறாருக்கு வலுவான கல்வி அடித்தளத்தை அமைப்பதை நோக்கமாகக் கொண்டது. ஆறு வயதுவரை உள்ள குழந்தைகளின் ஆரம்பக் கல்விக்கும் பராமரிப்புக்கும் உதவுகிறது. தரமான தொடக்கக் கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உதவுகிறது.
விஜயலக்ஷ்மி ராஜா, ஹூஸ்டன் |