கொய்யாப் பழ அல்வா
தேவையான பொருட்கள்
பெரிய கொய்யாப்பழம் - 4
கோதுமை மாவு - 1/4 கிண்ணம்
சர்க்கரை - 3 கிண்ணம்
நெய் - 1 1/2 கிண்ணம்
கேசரித் தூள் - சிறிதளவு
முந்திரிப் பருப்பு - 6
ஏலக்காய்த் தூள் - 1 தேக்கரண்டி

செய்முறை
பழத்தின் தோலை லேசாகச் சீவி எடுக்கவும். விதைகளை நீக்கிவிட்டு சதைப்பற்றை மிக்சியில் போட்டு அரைக்கவும். கோதுமை மாவை வாணலியில் நெய் விட்டுக் கொஞ்சம் வறுத்து, கொய்யா விழுதுடன் பிசைந்து வைக்கவும். சர்க்கரையைப் பாகுப்பதம் வரும்வரை கொதிக்க விட்டு, கலவையை அதில் போட்டுக் கிளறிக்கொண்டே இடையிடையே நெய் விட்டுக்கொண்டு வரவும். கேசரித் தூளைச் சேர்க்கவும். நன்றாகச் சுருண்டு அல்வா பதம் ஆகும்போது இறக்கவும். அதில் முந்திரி வறுத்துப் போட்டு ஏலக்காய்ப் பொடி போட்டுக் கலந்து தட்டிக் கொட்டிப் பரப்பி வில்லைகளாகப் போட்டுக் கொள்ளவும். இந்த வில்லை, ஆஹா, சுவையின் எல்லை!

தங்கம் ராமசாமி,
ப்ரிட்ஜ்வாட்டர், நியூ ஜெர்ஸி

© TamilOnline.com