தேவையான பொருட்கள் பலாச்சுளை - 6 சர்க்கரை - 3 கிண்ணம் பாதாம்பருப்பு - 10 முந்திரிப் பருப்பு - 1/4 கிண்ணம் நெய் - 1 கிண்ணம் கேசரித் தூள் - 1 தேக்கரண்டி ஏலக்காய்த் தூள் - சிறிதளவு
செய்முறை பலாப்பழத் துண்டுகளை மிக்சியில் அரைக்கவும். பாதாம் முந்திரியை ஊறவிட்டு அதையும் மிக்சியில் நைசாக அரைத்துப் பழக்கலவையுடன் கலந்து சர்க்கரையைப் பாகுப் பதம் வரும்வரை கொதிக்க விடவும். பழக்கலவையை அதில் போட்டு இடையிலேயே நெய் விட்டுக் கைவிடாமல் கிளறி நன்றாகச் சுருண்டு வரும்போது கேசரித் தூள் போடவும். ஒட்டாமல் வந்தவுடன் தட்டில் கொட்டிப் பரப்பவும். முந்திரிப் பருப்பு வறுத்துப் போட்டு ஏலக்காய்ப் பொடியும் போடவும். சூப்பர் அல்வா இது.
தங்கம் ராமசாமி, ப்ரிட்ஜ்வாட்டர், நியூ ஜெர்ஸி |