ஜூலை 2011: தென்றல் குறுக்கெழுத்துப் புதிர்
குறுக்காக
5. சுற்றி வர சூரியன் முதல் வியாழன் மூன்றாவதாம் (2)
6. கடைசியாகச் செத்து நாம் கத்த நிலைகுலைந்த உலோகம் ஒன்று (6)
7. நகரம் காட்டுப்புற பல்லி, பாம்பு (4)
8. உண்மையாக உதட்டுச் சாயம்? (3)
9. பூவில்லாமல் மாலையாகத் தொடுக்கப்படுவது (3)
11. ஒரு கண்டம் வாழ்த்துச் சொல்லா? (3)
13. இலங்கையில் அழகான காட்டுப்பகுதி உள்ளே திரும்பி வாடி (4)
16. 8ல் இருப்பதைக் கடைப்பிடித்து எளிமையாக இருப்பவர் (6)
17. கோல் நீக்கு (2)

நெடுக்காக
1. பய ஓட்டத்தில் பழகியவர் தடுமாறியதால் இளமையை இழந்தவர் (4)
2. எல்லோருக்கும் உரிமையானது (5)
3. உதாரணமாக சாமம் முடியாமல் பூனை மலர் உதிர்த்ததால் துன்பம் (3)
4. விரைவாக வெந்துவிட மரி (4)
10. பசி வந்திட ஒன்று பறந்து போய் நாணத்தில் நிறம் மாற .... (5)
12. உயர்ந்து பறவை இடை ஒரு பாட்டு வகையில் சேரும் (4)
14. உறுதியாகச் சொல் ஜனநாயகத்தில் ஈடுபடு (4)
15. ஒரு விலங்கு முனை (3)

வாஞ்சிநாதன்

ஜூன் 2011 விடைகள்

© TamilOnline.com