மணி ஆறு ஆயிடுச்சு. இன்னிக்குக் கடைசிப் பரிட்சை. இன்னைக்குப் பாத்து அலாரம் அடிக்கல. பேட்டரி காலி ஆய்டுச்சு போலிருக்கு! நேத்து 11 மணி வரைக்கும் பாடமெல்லாம் ரிவைஸ் பண்ணது பத்தாது. ஸ்கூலுக்குப் போறதுக்கு முன்னாடி இன்னொரு முறை பாக்கணும்.
ம்... பரிட்சையெல்லாம் முடிஞ்ச பின்னாடி 2 மாசம் லீவு. ஓட வேண்டாம். காலைல கொஞ்சம் எக்ஸ்ட்ரா தூக்கம் போடலாம். பிரேக்ஃபாஸ்டை வாயில திணிக்க வேண்டாம். ஸ்கூல் பையை நேத்தே ரெடி பண்ணினது நல்லதாப் போச்சு. ஐயையோ! இங்கதானே எக்ஸாம் கைடு இருந்தது. காணோமே! கடைசியாப் பாக்கலாமின்னு பார்த்தா முடியாது போலிருக்கே! படிக்கற ரூம்ல இருக்கும்... போய்ப் பார்க்கணும். அதுக்கு முன்னாடி இன்னொரு முக்கியமான வேலை. தூங்கறவனை எழுப்பணுமே. இப்படித் தூங்கினா பரிட்சை எழுதிக் கிழிச்ச மாதிரிதான்.
"டேய் ராஜேஷ் கண்ணா! எழுந்திருப்பா. பரிட்சைக்கு நேரமாச்சில்ல...."
"5 நிமிசம்மா..." ராஜேஷ் முனகினான், தலையோடு மறுபடியும் போர்த்திக் கொண்டு!
மிச்சிகன் ஹபீப் |