சிகாகோ: தமிழ்ப் பள்ளிகள் ஆண்டு விழா
மே 15, 2011 அன்று சிகாகோ மாநகரத்தைச் சார்ந்த நகரங்களின் ஒருங்கிணைந்த தமிழ்ப் பள்ளிகளின் ஆண்டு விழா புனித அலெக்ஸாண்டர் பள்ளி உள்ளரங்கில் கொண்டாடப்பட்டது. திருக்குறள் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துகளுடன் நிகழ்ச்சி

தொடங்க, பள்ளிகளின் ஒருங்கிணைப்பாளர் வடிவேல் பாபு வரவேற்புரை ஆற்றினார். ஆண்டு விழாவில் டெஸ்பிளெய்ன்ஸ், டேரியன், மில்வாக்கி, மன்ஸ்டர், நேப்பர்வில், சாம்பர்க், சாம்பெய்ன்ஸ், கெர்ணி, பியோரியா ஆகிய தமிழ்ப்

பள்ளிகளின் மாணவ, மாணவியர், தமிழ் மொழித்திறன், தமிழர் கலாசாரம் மற்றும் பண்பாடு நினைவு கூறுதல், சங்க கால இலக்கியத்தின் பிரதிபலிப்பு நிகழ்வுகள், தமிழர்களின் தனித்திறன் மற்றும் ஒற்றுமையின் வெளிப்பாடு என்று பல்சுவை

விருந்து அளித்து வந்திருந்தோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்கள். தமிழை கம்பீரமாக அமெரிக்க நகரங்களில் ஒலிக்கச் செய்து வரும் ஆசிரியப் பெருமக்களுக்கு வெகுமதிகள் அளிக்கப்பட்டன.

அரங்கத்தில் நடப்பு மற்றும் சங்க காலங்களின் தமிழ் அறிஞர்கள் பற்றிய குறிப்புடன் கூடிய புகைப்படக் கண்காட்சி இடம் பெற்றது. நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இறுதியாக முரளி

நன்றி கூறினார். தமிழ்ப் பள்ளிகளின் ஒருங்கிணைப்பாளர் வடிவேல் பாபு இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலையைக் கண்டித்ததுடன் தமிழினம் வளர வாழ்த்தி நிறைவுரை ஆற்றினார்.

வாசகர் மஜே

© TamilOnline.com