ஜூன் 2011: ஜோக்ஸ்
மனைவி: பசங்ககிட்ட சொல்லிட்டேன், இந்த விநாடியிலிருந்து வீட்ல தமிழ்ல மட்டும்தான் பேசணும்னு.
கணவர்: வெரிகுட். பசங்க என்ன சொன்னாங்க?
மனைவி: 'OK Mom'னு சொல்லிருக்காங்க… பார்க்கலாம்.

*****


நோயாளி: டாக்டர்...உங்களுக்கு உடம்பு முடியலேன்னா எங்கே போவீங்க?
டாக்டர்: எனக்குத் தெரிஞ்ச நல்ல டாக்டர்கிட்ட போவேன்... ஏன் கேக்கறிங்க?
நோயாளி: கொஞ்சம் அந்த நல்ல டாக்டர் நம்பர் கொடுக்கிறீங்களா!

*****


தொண்டர் 1: புது மந்திரியப் பார்த்து மனு கொடுக்க எப்படிப் போகணும்?
தொண்டர் 2: பெட்டி நெறய பணத்தோட....

*****


தொண்டன் 1: தலைவர் ஏன் M.P.ங்கிறத பெயருக்குப் பின்னாடி போடாம முன்னாடி போட்டிருக்காரு!
தொண்டன் 2: அவரு முன்னாள் M.P.யாம், அதனாலதான்.

*****


தொண்டன் 1: நடந்து முடிஞ்ச தேர்தலில தலைவரு ஒரு வோட்டுல தோத்துட்டாராம்!
தொண்டன் 2: அடடா! இப்போ என்ன பண்ணப் போறாராம்?
தொண்டன் 1 : எப்படி கள்ள வோட்டுப் போடுறதுன்னு கத்துக்கப் போறாராம்.

*****


பெரியவர்: போன தடவ அமெரிக்கா வந்தபோது சாப்பிட்ட போண்டா இருக்கா?
சர்வர்: கவலப்படாதீங்க! அதுக்கு முன்னாடி அமெரிக்கா வந்தப்ப சாப்பிட்ட போண்டாவே இருக்கு.

மிச்சிகன் ஹபீப்

© TamilOnline.com