கொண்டைக் கடலை கார போண்டா
செய்முறை
அரைத்த கொண்டைக் கடலை மாவில் ஒரு மேசைக்கரண்டி சோளமாவு, ஒரு மேசைக்கரண்டி அரிசிமாவு, சிறிது இஞ்சித் துருவல், ஒரு தேக்கரண்டி மிளகாய்த் தூள், பொடியாக நறுக்கிய பச்சைக் கொத்துமல்லி, ஒரு சிட்டிகை பெருங்காயத் தூள், தேவைக்கேற்ப உப்பு சேர்த்து, அதில் சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைக்கவும். எண்ணெய் காய்ந்த பிறகு பிசைந்த மாவைச் சிறுசிறு போண்டாவாக உருட்டிப் போடவும். பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். சுடச்சுட மொறுமொறு போண்டா ரெடி. சட்னியுடன் ஒரு வெட்டு வெட்டலாம்.

பிரேமா நாராயணன்,
கேன்டன், மிச்சிகன்

© TamilOnline.com