குறுக்காக
3. விழல் காணுமிடம் பேச்சு தடுமாற வெளியே மூப்பின் அறிகுறி (5)
6. கட்டுக்கோப்பு சிதறி உள்ளே சிறிதான மாலை கொண்டு உட்கார் (4)
7. ஒரு பொறி தலை வெட்டிய கயிறு உயிருக்கு ஆபத்து (4)
8. வேலை ஏந்திய ஆயர்குலத்தவர் அவர் யாருக்கும் கட்டுப்படமாட்டார் (6)
13. எதனுடனும் சேராத விசேஷமான குணம் (6)
14. உன் பாட்டுக்கு அடக்கிய தாளக்கருவி (4)
15. கௌதமரின் கல் (4)
16. இந்து தடி சுழற்றியதால் கட்டிடம் சிதைந்தது (5)
நெடுக்காக
1. இங்கே கல் (5)
2. யோசிக்காமல் கொட்டி ஒரு கேள்வி (5)
4. விபூதி அணியாமல் சுதந்திரத்திற்குப் போராடியவரோ? (4)
5. பிறரிடம் வாங்கிய பணம் தெரு முனையில் மடக்கும் ஒரு பறவை (4)
9. பாண்டவர் ஆயுதக் 'கிடங்கில்' கள்வனின் பானம் இல்லாமல் மயக்கம் (3)
10. கடிதத்தில் பால் நீக்கிய ஏடு சூழ வெற்றியின் அடையாளம் (5)
11. ஆர்ப்பாட்டமின்றி உருவாக்கு பிறருக்காகத் தன்னைக் கொடுக்கும் பண்புடைய பிணைப்பு (5)
12. கடைசிநாள் பெண்யானை கடுமையான கட்டுப்பாடு (4)
13. ஏற்ற முடியாத குந்தவையிடம் பாருங்கள் (4)
வாஞ்சிநாதன்
மே 2011 விடைகள்குறுக்காக: 5. பிற 6. சுவர்க்கோழி 7. மாதுங்கா 8. பரிதி 9. கருவி 11. பவனி 13. சாம்பல் 16. பார்க்கலாமா 17. கரி
நெடுக்காக: 1. மறவாது 2. காசுக்காக 3. பார்வை 4. சகோதரி 10. விசாலமான 12. வளர்க 14. பக்கம் 15. காகம்
மே 2011 புதிர் மன்னர்கள்:
ஆர் நாராயணன், ஃபோல்சம், கலி.
வி.ஆர். பாலகிருஷ்ணன், ஜவஹர் நகர், சென்னை
அம்ருதா பார்த்தசாரதி, அரும்பாக்கம், சென்னை
மற்றவர்கள்:
கி.க்ஷி. லக்ஷ்மிநாராயணன், கலி.; லலிதா, சான்டா க்ளாரா, கலி.; ஆனந்த் கே., சான் ஹோசே, கலி.; ஸ்ரீனிவாச ராமானுஜம், ஹனோவர் பார்க், இல்லிநாய்ஸ்; வசுப்ரதா, டாலஸ், டெக்ஸஸ்; லாவண்யா ராமநாதன், ஃபோஸ்டர் சிடி.