புதுக் கலிஃபோனிய ஊடகங்கள் ஆண்டு விழாவில் 'தென்றல்'
ஜனவரி 26, 2006 அன்று புதுக் கலிஃபோர்னிய ஊடகங்கள் (New California Media) என்ற சிறுபான்மை ஊடகங்கக் கூட்டணியின் ஏழாவது ஆண்டு விருதுவிழா சான் ஓசே ஃபேர்மான்ட் விடுதி மாநாட்டு அரங்கில் நடந்தது. சிறுபான்மை ஊடகங்களின் புலிட்சர் விருது என்று சிறப்பிக்கப்படும் இந்த விருது வழங்கும் விழாவின்போது இந்த அமைப்பு தனது பத்தாம் ஆண்டு நிறைவையும் கொண்டாடியது. மாநிலமெங்கிலும் இருந்து எழுநூறுக்கும் மேற்பட்ட செய்தியாளர்கள், சிறுபான்மை ஊடகப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். தென்றலின் சார்பில் பதிப்பாளர் சி.கே. வெங்கட்ராமன், ஆசிரியர் மணி மு. மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



© TamilOnline.com