2011 மே 27ம் தேதி முதல், ஜூலை இறுதிவரை, 'அம்மா' ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி அவர்கள் அமெரிக்கா மற்றும் கனடாவின் பல ஊர்களுக்கு வருகை தர இருக்கிறார். 'அரவணைக்கும் ஞானி' (Hugging Saint) என்
அன்போடு அழைக்கப்படும் அம்மா, மக்களின் துயர் துடைப்பதற்காகத் தமது வாழ்நாளை அர்ப்பணித்துள்ளார்.
அம்மா வருகை தர இருக்கும் ஊர்களும், தேதிகளும்: சியாடல் 05.27 - 05.30 சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி 06.02 - 06.08 லாஸ் ஏஞ்சலஸ் 06.10 - 06.14 ஆல்பகர்க்கி 06.17 - 06.20 டாலஸ் 06.22 - 06.23 கோரல்வில், அயோவா 06.25 - 06.26 சிகாகோ 06.28 - 06.29 நியூயார்க் 07.02 - 07.04 வாஷிங்டன் டி.சி. 07.06 - 07.07 பாஸ்டன் 07.10 - 07.13 டொரன்டோ, கனடா 07.15 - 07.18
இலவசப் பொது நிகழ்ச்சிகளில் அம்மாவின் தரிசனம், ஆன்மீக சொற்பொழிவுகள், தியானம், பஜனைகள் நடைபெறும். சில ஊர்களில் ஆன்மீக முகாம்களும் (retreat) நடைபெறும் - இதில், ஆன்மீக மற்றும் தியான வகுப்புகள்,
தன்னலமற்ற சேவை, அம்மாவோடு கேள்வி-பதில், அம்மாவின் உணவு பரிமாற்றம், ஒருங்கிணை அமிர்தா தியானம் (Integrated Amrita Meditation) ஆகியவை நடைபெறும்.
அம்மா ஆற்றும் பொதுநலத் தொண்டுகள் பற்றி அறிய: www.amritapuri.org மேலும் விபரங்களுக்கு: www.amma.org
சூப்பர் சுதாகர் |