CTA பள்ளிகள் ஆண்டுவிழா
மே 22, 2011 அன்று CTAவின் பல்வேறு பள்ளிக் கிளைகள் தமது ஆண்டு விழாவைத் தத்தமது பகுதிகளில் கொண்டாட இருக்கின்றனர். கலிஃபோர்னியா தமிழ் அகாடமி (CTA) கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவில் வாழும்

புலம்பெயர் தமிழர்களுக்குத் தமிழ் கற்பித்து வருகிறது. இங்கு வாழும் தமிழ் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், ஆர்வலர்களால் CTA கிளைப் பள்ளிகளில் இன்று 1800க்கு மேற்பட்ட மாணவர்கள் தமிழ் படிக்கின்றனர். தமிழை வெறும்

பாடநூல்கள் மூலமாக மட்டும் கற்பிக்காமல், கலைகளின் மூலமாகவும் கற்க வேண்டும் என்பது CTAவின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று. கலைகள் மூலமாகத் தமிழ் மொழியை மட்டுமின்றி, கலாசாரத்தையும், பண்பாட்டையும் சேர்த்தே

கற்கலாம். மாணவர்கள் தங்கள் தமிழார்வத்தையும், திறமையையும் வெளிப்படுத்த CTA ஆண்டு விழா ஒரு சிறந்த மேடை.

CTA வின் இணையதளத்துக்குச் சென்றால் அனைத்துப் பள்ளி கிளைகளுக்கான தொடர்பு விவரங்கள் உள்ளன. உங்கள் பகுதியில் உள்ள கிளையைத்

தொடர்பு கொண்டு விழா விவரங்களை தெரிந்துக்கொள்ளுங்கள். குடும்பத்துடன் வந்திருந்து விழாவைக் காண அழைக்கிறோம். உயர்தர நிகழ்ச்சிகளையே தரவேண்டும் என்ற கொள்கை கொண்டதால், பல விதிமுறைகளுக்கும், கட்டுப்பாட்டிற்கும்

அடங்கியே நிகழ்ச்சிகள் அமைந்திருக்கும். குழைந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நிகழ்ச்சிகளை ரசிக்கலாம்.

அடுத்த ஆண்டு புலம்பெயர்ந்து உலகெங்கும் பரவி வாழும் தமிழர்கள், பிற மொழி பேசும் சூழலில், தம் சந்ததியினருக்குத் தமிழ் கற்பிக்க முயற்சித்துவரும் ஆசிரியர்களும், ஆர்வலர்களும் பயனடையும் வகையில் ஒரு மாநாட்டை CTA ஏற்பாடு

செய்துள்ளது. 'புலம் பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு–2012' என்ற மாநாட்டை 2012ஆம் ஆண்டு ஜூன் 8, 9, 10 தேதிகளில் சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில் சவால்கள், நோக்குகள், சாத்தியங்கள் என்ற கருப்பொருளின் பின்னணி மாநாடு நடக்க இருக்கிறது. இதிலும் பங்கேற்க வாசகர்களுக்கு CTA அழைப்பு விடுத்துள்ளது.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com