மீண்டும் 'கிச்சன் கில்லாடி' போட்டிகள்
சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் மருந்தோ மருதுவமோ இல்லை என்று எண்ணப்பட்ட ஒரு சில நோய்களில் புற்றுநோயும் ஒன்று. இந்த நோயின் வீரியம், இந்த நோயினால் பாதிக்க பட்டவர்களுக்கும் அவரது நண்பர்கள் மற்றும்

உறவினர்களுக்கும் மட்டுமே தெரிந்தது. போக போக புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை அதிகரித்தது. அப்படிப்பட்ட காலகட்டத்தில் தான் இந்தியாவில் முதல் பெண் மருத்துவர் என்ற பெருமைக்குரிய டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி

அவர்கள் 1954ல் புற்றுநோயை எதிர்த்து போராடலானார். அவரால் உருவாக்க பட்டதே chennai adayar cancer institute. அவரை தொடர்ந்து டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் சாந்தா அவர்கள் மற்றும் பலர் இந்த நல்ல

நோக்கத்தை குறிக்கோளாக கொண்டு அவர் கனவை நனவக்கிக்க்கொண்டு இருக்கிறார்கள்.

சென்னை cancer institute-ல் வருடத்திற்கு 125,000 நோயாளிகள் இந்தியா முழுவதிலும் இருந்து வந்து சிகிச்சை பெறுகின்றனர். நோயாளிகளுக்கான 423 படுக்கையில் 297 இலவச சிகிச்சை பெறுபவர்களுக்காக ஒதுக்கப்படுகின்றது.

இதில் எந்த அரசின் பண உதவியும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாக 66 சதவிகிதம் இலவச சிகிச்சை சாத்தியமாவது பல சேவை மையங்களால் தான். அதில் Cancer Institute Foundation (CIF) US முக்கிய பங்காற்றுகின்றது.

அமெரிக்க வாழ் இந்தியரால் லாப நோக்கம் இல்லாத அமைப்பாக செப்டம்பர் 2004 ல் சேவையை மட்டுமே அடிப்படையாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டது Cancer institute Foundation US. இதன் நோக்கம் நிதி உதவி பெற்றும் பொது

மக்கள் நன்கொடை மற்றும் கலை விழா நடத்தி அதன் மூலமாக வரும் உதவித்தொகை அனைத்தையும் இந்தியாவில் புற்றுநோய் சிகிச்சை மற்றும் தடுப்புக்காக அடையார் cancer institute-க்கு வழங்க படுகின்றது.

2007 ல் மட்டும் 200 000 டாலர் க்கு digital radiography இயந்திரம் ஒன்று சென்னை cancer institute க்கு அளிக்கப்பட்டது. 2008 ல் 225000 டாலர் புற்றுநோய் சிகிச்சை மற்றும் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வுக்காக

இந்தியாவுக்கு அனுப்பப்பட்டது, 2010 மார்பக புற்று நோய்காக Digital Mammogram ஒன்றும் வழங்கப்பட்டது. இவை அனைத்தும் மக்களாகிய உங்களின் ஆதராவால் தான் சாத்தியமானது. சென்ற வருடம் CIF சாரல் என்ற கலை

விழாவுடன் kitchen killadi என்ற சமையல் போட்டியும் நடத்தியது. அந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்ததாலும், மக்கள் இடையே நல்ல ஆதரவு பெற்றதாலும், இந்த வருடமும் மே 14 ஆம் தேதியன்று முதல் சுற்றும் மே 28 ஆம்

தேதி இறுதிச்சுற்றும் நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்வதன் மூலமாக, தங்களுடைய சமையல் திறனை வெளிப்படுத்துவதுடன் இந்த நல்ல நோக்கத்திற்கு உதவிய ஆத்ம திருப்தியும் கிடைக்கும். இதன் நோக்கம் மக்கள் இடையே

புற்றுநோயின் விழிப்புணர்வை கொண்டு வரவும், நம் இந்திய மண்ணில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை சகோதர சகோதரிகள் குணமடையவும் பயனடையவும் நம்மால் ஆனா சிறு உதவி எனலாம்.

Kitchen killadi இரண்டு சுற்றுகளை கொண்டது. முதல் சுற்று அவரவர் வீட்டில் சமைத்து வந்த உணவை , நடுவர்கள் மற்றும் பார்வையாளர்கள் சுவைத்து (சுவை, குடுக்கப்பட்ட பொருளை திறமையாக உபயோகப்படுத்துதல்,

செய்முறையில் தனித்தன்மை, அலங்காரத்துடன் பரிமாறுதல், ஆரோக்யமாக சமைத்தல்) போன்ற கூறுகளை கொண்டு மதிபிடுவார்கள். 70 சதவிகிதம் நடுவர்களின் கணிப்பும் 30 சதவிகிதம் பார்வையாளர்களின் கணிப்பையும் கொண்டு வெற்றி

நிர்ணயிக்கப்படும். முதல் சுற்றுக்கு இந்த வருடம் தேர்ந்தெடுக்கப்பட்ட ingredient ஒரு பச்சைக் காய்கறி. இதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் இறுதி சுற்றிற்கு தகுதிபெறுவர். இறுதி சுற்று அரங்கத்திலேயே சமைக்க வேண்டும். போட்டியிட

வேண்டும் என்பவர்கள் செய்ய வேண்டியது www.cifwia.org என்னும் இனையதளம் சென்று kitchen killadi என்பதில் அவர்களது பெயர் மற்றும் மற்ற விவரங்களை அளித்து பதிவு செய்யலாம். எங்கள் CIF குழுவினர் உடனே

உங்களை தொடர்பு கொள்வர்.

நிகழ்ச்சியன்று நுழைவு கட்டணம் இலவசம். உங்கள் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் ஆதரவாளருடன் வந்து கண்கவர் பரிசை வெல்லுங்கள்.

வீட்டில் மட்டுமே சமைத்து தங்கள் திறனை காட்டிய திறமையலார்களே ....

களம் உங்களுக்காக காத்திருக்கிறது! வாருங்கள்! சமைத்து திறமையை காட்டுங்கள்! பரிசை தட்டிச்செல்லுங்கள்!

உமா ரவி

© TamilOnline.com