மிச்சிகன்: 'சரோவர் 2011' இசைவிழா
2011 மே 6, 7, 8 தேதிகளில் மிச்சிகன் கிரேட் லேக்ஸ் ஆராதனை கமிட்டியும், ஓக்லாந்து பல்கலைக் கழகமும் இணைந்து 'சரோவர் 2011' என்னும் மாபெரும் இசைவிழா ஒன்றைப் பல்கலைக்கழக வளாகத்தில் நடத்த உள்ளனர். இது உலக அமைதிக்காக நடத்தப்படும் விழா ஆகும்.

இந்தோ அமெரிக்கன் நிகழ்கலை விழா (Indo-American Festival of Performing Arts) ஆன இது முன்னணிக் கலைஞர்களின் கச்சேரி, கதாகாலட்சேபம், கலந்திசை, பரதநாட்டியம், குச்சிபுடி, மெல்லிசை என்று பல அம்சங்கள் கொண்டதாக இருக்கும். இதில் டி.என். சேஷகோபாலன், ஷஷாங்க், சௌம்யா, கர்நாடிகா சகோதரர்கள், சவிதா நரசிம்மன், சங்கீதா சுவாமிநாதன் ஆகியவர்களோடு, 'கர்நாடிக் மியூசிக் ஐடல்', 'ஹரியுடன் நான்' போட்டிகளில் வென்றவர்களும் இசை விருந்து வழங்க வருகிறார்கள். ஓக்லாந்து பல்கலைக் கழக இசைக்குழு, மிச்சிகன் பகுதி இசை, நடனப் பள்ளி மாணவர்கள் ஆகியோரும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை வழங்க உள்ளார்கள்.

இந்த மூன்று முழுநாள் நிகழ்ச்சி ரசிகர்களுக்கும், இளம் இந்தியத் தலைமுறைக்கும் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாக அமையும். மேலும் விவரங்கள் அறிய: www.glacmichigan.com

நாள்: மே 6, 7 & 8, 2011
இடம்: Varner Hall, Oakland University, 2200 N Squirrel Rd, Rochester, MI 48309 (248) 370-2100

சுபா கணபதி,
கேன்டன், மிச்சிகன்

© TamilOnline.com