"வரவர இந்த காலத்துப் பசங்களப் புரிஞ்சிக்கவே முடியல" என்றான் ராஜேஷ், மாலதியைப் பார்த்து. "ஏன், என்ன ஆச்சு?" மாலதி கேட்க ராஜேஷ் தொடர்ந்தான்.
"பின்ன என்ன. இன்னும் பத்து வயசுகூட ஆகல. பையனுக்கு லேப்டாப் வேணுமாம். அதுவும் i3 intel ப்ரோசசர், 6GB மெமரி, 500GB ஹார்ட் டிஸ்க், வெப்கேம், அப்பப்பா… பெரிய லிஸ்டே சொல்றான். எல்லாம் சேர்த்தா 550 டாலர் ஆகும்."
"ம்... அப்பறம்…" என்றாள் மாலதி ஆர்வத்துடன் ..
"கடைசில லேப்டாப்புக்கு பதிலா Ninetindo DS வாங்கித் தரேன்னு அவனச் சம்மதிக்க வெக்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆய்டுச்சு. நூறு நூத்தம்பது டாலர்ல முடிஞ்சுடும்" பெருமிதத்துடன் கூறி முடித்தான் ராஜேஷ்.
"அப்படியா" என்ற மாலதி தொடர்ந்தாள், "நேத்து என்கிட்ட வந்து பிரண்ட்ஸ் எல்லாம் வெச்சுருக்காங்க, எனக்கும் வேணுமின்னு கேட்டான். நான் கண்டிப்பா முடியாது, அப்பாவும் முடியாதுன்னு சொல்வாருன்னு சொன்னேன்…. எது தெரியுமா? Ninetindo DS! நல்லா அரைச்சிருக்கான் 550 டாலர் மிளகாய!"
ராஜேஷ் முகத்தில் கேலன் கணக்கில் விளக்கெண்ணெய்!
மிச்சிகன் ஹபீப் |