தேவையான பொருட்கள்: புழுங்கல் அரிசி - 1 கிலோ சிவப்பு மிளகாய் - 4 மஞ்சள் தூள் - 1 சிட்டிகை உப்பு - தேவைக்கேற்ப வெங்காயம் - சிறிதளவு கொத்தமல்லி - சிறிதளவு எண்ணெய் - சிறிதளவு
செய்முறை புழுங்கலரிசியை 3 மணி நேரம் ஊறவைத்துக் கழுவி, அரிசியுடன் மிளகாய், மஞ்சள், உப்பு சேர்த்து சிறிது நீர் விட்டு கட்டியாக ஆட்டி எடுக்க வேண்டும். அதில் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி நன்றாகக் கலந்து தோசைக் கல்லில் அடைகளாக தட்டி இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு எடுக்கவும். வேகும்வரை அடையை மூடி வைத்தால் நன்றாக இருக்கும். இதற்குத் தொட்டுக் கொள்ள உருளைக் கிழங்கு மசால் (பூரிக்குச் செய்வது) நன்றாக இருக்கும்.
பிரேமா நாராயணன், கேன்டன், மிச்சிகன் |