தேவையான பொருட்கள்: உலர்ந்த கொட்டை நீக்கிய பேரீச்சம் பழம் - 1 கிண்ணம் கோதுமை மாவு - 1/2 கிண்ணம் நெய் - 1/2 கிண்ணம் சக்கரை - 1 கிண்ணம் வறுத்த முந்திரி பருப்பு - 6 ஏலக்காய் பொடி - சிறிதளவு
செய்முறை ஒரு கிண்ணத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி அதில் பேரீச்சம்பழத்தைப் போட்டு மைக்ரோவேவில் நன்றாக வேகவிடவும். ஆறியபின் அதை மிக்சியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது நெய் ஊற்றி கோதுமை மாவை நன்றாக வறுத்துக்கொள்ளவும். அதில் 1/2 கிண்ணம் தண்ணீர் ஊற்றி சர்க்கரை சேர்த்துக் கிளறவும். இதில் அரைத்த பேரீச்சம்பழத்தை சேர்த்து நன்றாகக் கிளறவும். இதோடு மீதமுள்ள நெய் ஊற்றி ஏலப்பொடி சேர்த்துக் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டுவர, நெய் தடவிய தட்டில் கொட்டி வில்லைகளாகப் போடவும். மேலாக வறுத்த முந்திரிபருப்புத் துண்டுகளால் அலங்கரிக்கவும். ஒரு வித்தியாசமான, இரும்புச் சத்து மிக்க ஹல்வா தயார்!
பிரேமா நாராயணன், கேன்டன், மிச்சிகன் |